Get APP in 

நடிகர் சங்க தேர்தல் - பாக்யராஜ் அணிக்கு விஜயகாந்த ஆதரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகின்ற 23ம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான ‘பாண்டவர்’ அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கர்தாஸ்’ அணியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் தங்களது அணிக்கு ஆதரவு அளிக்கக் கோரி கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கர்தாஸ் அணியினர் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ் "எங்கள் அணிக்கு நடிகர் விஜயகாந்த் ஆதரவு அளிப்பதாக தெரிவித்ததுடன், எங்கள் அணி வெற்றி பெறும் என்றும் வாழ்த்தினார்" என்று கூறியுள்ளார்.