Get APP in 

'அசுரன்' படத்தின் முக்கிய தகவல்

'வடசென்னை' படத்தின் வெற்றிக்கு பின், வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், சுப்ரமணிய சிவா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் தனுஷ் அப்பா, மகன் என இரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தனுஷ் ஒரே கதாபத்திரத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் என உறுதியாகியுள்ளது. மேலும் அக்டோபர் இரண்டாம் தேதி அசுரனை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற அக்டோபர் 17ந்தேதி தான் வெற்றிமாறன், தனுஷின் கூட்டணியில் வடசென்னை வெளியானது. அந்த அக்டோபர் ராசியில் அசுரன் படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

All Categories

Banner right

Most Popular