Get APP in 

இலஞ்சி குமாரர் கோயில், தென்காசி

இலஞ்சி குமாரர் கோயில் திருநெல்வேலி மாவட்டம், தென்காசியிலுருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. குமாரர் கோயிலில் தினமும் திருவனந்தல் விழா பூஜை, காலசந்தி, உச்சிகால பூஜை, சாயரட்சை, அர்த்தசாமம் என்று ஆறுகால பூஜை நடக்கின்றது. மேலும் ஐப்பசி திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, மாசிமாதம் நாள் கதிர் திருவிழா, சித்திரை விசு, வைகாசி விசாகம் போன்ற விஷேச நாட்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கூட்டம் இவ்விழாக்களின் போது அலைமோதி காணப்படும்.

Temple Name: Ilanji Kumarar Temple
Place: Ilanjii, Near Tenkasi, Tirunelveli District, Tamilnadu, INDIA.
Geo Location: https://www.google.co.in/maps/@8.9480519,77.2751428,16.5z
Bus Service: Regular town buses available from Tenkasi, Kutralam & Sengottai. Buses from Madurai to Kutralam are passing through this Temple.
Train Service: Nearest Railway stations - Tenkasi 6 kms, Sengottai 6 kms
Nearest Airport: Tuticorin 102 kms, Madurai 160 kms

 

அகஸ்திய முனிவர், அருணகிரி நாதர் வழிபட்டு சென்றதாக புராண நூல்கள் கூறுகின்றன. கடந்த 1950ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாண முதல் கவர்னராகிய மேதகு கிருஷ்ணசிங் (பவநகர் மஹாராஜா) குமார கடவுளை வழிபட்டு இயற்கை அன்னையின் வனப்பை கண்டு வியந்து சென்றிருக்கிறார். இதே ஆண்டு டிசம்பர் மாதம் திருவாடுதுறை ஆதீனம் 20வது பட்டம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகளும், 1951ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி தருமபுரம் ஆதீனம் 25வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் மற்றும் பத்மானாபுரம் மகாராஜா முதல் குறுநில மன்னர்கள் வரை இங்கு வந்து வழிபட்டு சென்றிருக்கிறார்கள்.

தல வரலாறு:

திரிகூட மலையின் வடகீழ்த் திசையிலே சந்தித்த காசிப முனிவர், கபில முனிவர், துருவாசமுனிவர் ஆகிய மூவரும் தத்துவ ஆராயச்சி செய்து கொண்டு இருந்தனர், அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட வினாவிற்கு முருகக் கடவுள், தன் என்றும் மாறா இளமை அழகுடன் தோன்றி ”தானே மும்மூர்த்தியாகி மூவினையும் செய்வோம் ”என்று கூறி அவர்களது ஐயத்தை தீர்த்தார். மூன்று முனிவர்களும் இங்கேயே எழுந்தருளியிருந்து வழிபடுவோர் யாவருக்கும் ஞானம் அளித்து விரும்பும் வரத்தைக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.அதன்படி குமாரக் கடவுள் இத்தலத்தில் எழுந்தருளினார். வரதராஜக்குமாரரென பெயர் இத்தல முருகனுக்கு. இன்றும் வேண்டுவார் வேண்டும் வரங்கொடுத்து அருள்கிறார். என்கிறது ஒரு புராணக் கதை, சிவபெருமான் உமா தேவியார் ஆகியோரது திருமணத்தைப் பார்க்க யாவரும் இமயத்தில் கூடியதால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்து விட்டதை சரிசெய்ய அகத்தியரை தென்னாடு செல்லப்பணித்தார்.

அகத்தியரை, குற்றால நன்னகரியில் மாயவனாகிய நம்மைச் சிவனாக்கி பூசனை செய், அங்கே உனக்கு மணக்கோலமும், நடனமும் காட்டுகிறோம் என்று சொல்லி அனுப்புகிறார். அகத்தியர் தன்னால் முடியாத போது முருகனின் உதவியை வேண்டுகிறார். அவர் சொன்னபடி விஷ்ணுவை சிவனாக்கி வழிபட்டார், சிவார்ச்சனை செய்ய 28 ஆகமங்களை ஓதி வைத்தார் அகத்தியருக்கு.
இப்படி இலஞ்சிக் குமரனின் பெருமைகள் நிறைய சொல்லப்பட்டு இருக்கிறது.

கோவிலில் உள்ள கோசாலை.

கோவிலில் உள்ள நாகலிங்க மரம்.

All Categories

Banner right

Most Popular