Get APP in 

இயக்குனர் மீது குணச்சித்திர நடிகை ஷாலு பாலியல் புகார்

திரைத்துறையில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் பாலியல் புகார்களாக கடந்த ஆண்டு மீடூ இயக்கத்தின் மூலம் வெளியே வர துவங்கியது. இதனிடையே 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மிஸ்டர் லோக்கல்' உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகை ஷாலு தற்போது பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் சினிமாவில் நீங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானீர்களா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நடிகை ஷாலு நானும் இத்தகைய கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். சமீபத்தில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்தார் என பதிலளித்துள்ளார்.