Get APP in 

ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்கில் நடிகை அனுஷ்கா

'பாகுபலி' படங்களுக்குப் பிறகு 'பாகமதி' படத்தில் மட்டுமே நடிகை அனுஷ்கா நடித்துள்ளார். அதன் பின் தற்போது மாதவனுடன் 'சைலன்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகை அனுஷ்கா கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த ஸ்பானிஷ் படமான 'ஜுலையாஸ் ஐஸ்' என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இயக்குனர் கபீர் லால் இயக்கத்தில் தமிழ் மாற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.