Get APP in 

ஜெயம் ரவியின் 25வது படத்தின் நாயகி குறித்த தகவல்

நடிகர் ஜெயம் ரவி தற்போது 'கோமாளி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜெயம் ரவியின் 24வது படம். இதனை தொடர்ந்து 'ரோமியோ ஜுலியட், போகன்' படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவி, இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ஜெயம் ரவியின் 25வது படம். இந்நிலையில், இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க நிதி அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.