Get APP in 

இனி தோல்வி படங்களில் நடிக்கமாட்டேன் - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மிஸ்டர்.லோக்கல்'. இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரிவர பூர்த்திசெய்யவில்லை. மேலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், இதுகுறித்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் "'மிஸ்டர் லோக்கல்' தோல்விப் படம் தான். தோல்வியில் கூட என்னுடன் இருக்கும் எனது ரசிகர்கள் தான் எனக்கு பலம். இனிமேல் எனது படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படமாகவே இருக்கும். அதை நான் இப்போது உறுதியாக சொல்கிறேன்" என்று அவர் கூறினார்.