Get APP in 

'கரகாட்டக்காரன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்

கடந்த 1989ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் உருவான படம் 'கரகாட்டக்காரன்'. இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இருக்கும் நகைச்சுவை காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. இது குறித்து கங்கை அமரன் கூறுகையில் "2-ம் பாகம் எடுப்பது குறித்து ராமராஜன் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போதைய நடிகர்களில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என அவர் கூறினார்.