Get APP in 

நடிகர் ரஹ்மானின் '7' படம் திரையிடும் தேதி அறிவிப்பு

இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில், நடிகர் ரஹ்மான் நடித்து வரும் படம் '7'. இந்த படத்தில் நாயகிகளாக நடிகை ரெஜினா மற்றும் நந்திதா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சைத்தான் பரத்வாஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் ஜூன் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.