Get APP in 

பிரபல நடிகரை பார்த்து அதிர்ச்சியான கேள்வியை கேட்ட ஜெனிலியா

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் 'கோமாளி'. ஜெயம் ரவியின் 24வது படமான இதில், காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 9 வேடங்களில் ஜெயம் ரவி நடித்து வரும் இந்த படத்தை பிரபலப்படுத்தும் விதமாக தினமும் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று வெளியாகிய 9வது போஸ்ட்டரை நடிகை ஜெனிலியா பார்த்துவிட்டு "உனக்கு வயசே ஆகாதா. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இளைஞன் போல தோற்றமளிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.