Get APP in 

விஷாலின் 'அயோக்யா' படம் திரையிடுவதில் திடீர் பிரச்னை

விஷாலின் 'அயோக்யா' திரைப்படத்திற்கான முன்பதிவுகள் சமீபத்தில் துவங்கியது. இன்று காலை 8 மணிக்கு முதல் காட்சி ஆரம்பிக்கவிருந்த நிலையில் திடீரென இந்த படம் இன்று திரையுடவில்லை என்றும், திரையிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் "திரைப்படத்தை திரையிட ஒரு நடிகனாக செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டேன். ஆனால் அது மட்டும் திரையிட போதுமானதாக இல்லை. என்னுடைய நேரம் ஒருநாள் வரும். இருப்பினும் நான் என்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டே இருப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.