Get APP in 

முன்கூட்டியே திரைக்கு வரும் பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படம்.

சுரேஷ் ஓபராய் மற்றும் சந்திப் எஸ் சிங் ஆகியோரின் தயாரிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம், தமிழ் உள்பட 23 மொழிகளில் தயாராகியுள்ளது. இயக்குநர் ஓமங் குமா இயக்கத்தில், நடிகர் விவேக் ஓப்ராய் மோடி வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு 'பி.எம்.நரேந்திர மோடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விவேக் ஓப்ராய் மோடி வேடத்தில் தோன்றும் 9 வித ’கெட்டப்’ அடங்கிய புகைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம், தற்போது முன்கூட்டியே அதாவது, ஏப்ரல் 5ம் தேதியே திரைக்கு வருகிறது.

All Categories

Banner right

Most Popular