Get APP in 

கதிர் நடிக்கும் 'சர்பத்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

'பரியேறும்பெருமாள்' படத்தின் மூலம் பிரபலமாகிய நடிகர் கதிர் தற்போது விஜய்யுடன் 'தளபதி 63' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக இருந்த பிரபாகரன் இயக்கத்தில் 'சர்பத்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூரி, இளம் நாயகி ரகசியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.