Get APP in 

சிபிராஜ் நடிக்கும் 'வால்டர்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில், தயாரிப்பாளர் பிரபு திலக் தயாரிப்பில் 'வால்டர்' என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் சிபிராஜ், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இந்த படத்திற்கான பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது. இதற்கான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக நடிகர்கள் விக்ரம் பிரபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அன்பரசன் இயக்கத்தில், சிங்காரவேலன் என்பவர் இந்த படத்தை தயாரிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.