Get APP in 

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்

தலச் சிறப்பு:

பெயருக்கேற்றாற்போலவே இந்த ஆஞ்சநேயர் நின்ற திருகோலத்தில் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நிற்கிறார். அதேசமயம் அனுமனின் பக்தியும், கருணையும் வெளிப்படும் வகையில், ஒரு கண் அயோத்தியை பார்ப்பது போலவும், ஒரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உதவும் கருணையுடன் பார்ப்பது போலவும் அமைந்துள்ளது.

தல வரலாறு:

துவாபரா யுகத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்ற போது இந்த ஸ்தலத்தின் அருகில் உள்ள மலையில் சிறிது காலம் வசித்து வந்தார்கள் அப்போது பாஞ்சாலிக்கு சிவபூஜை செய்வதற்கு தண்ணீர் தேவைப்படுகிறது மலையின் அடிவாரத்தில் வேகவதி ஆறு (வைகையின் புராணகால பெயர்) அடர்ந்த காட்டில் நடுவே ஜலசப்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது பாண்டவர்களில் மூத்தவர் யுதிஷ்டிரன் தனது தம்பி பீமனை அழைத்து தண்ணீர் எடுத்து வர கீழே அனுப்புகிறார்.

பீமன் வேகவதி நதியிலிருந்து தண்ணீர் எடுக்கும் போது ஸ்ரீ ஆஞ்சநேயர் ஒரு பெரிய வானரமாக உருமாறி பீமனை தண்ணீர் எடுக்கவிடாமல் தடுக்கிறார். இருவருக்கும் யுத்தம் நடைபெறுகிறது. யுத்தத்தில் தோல்வியுற்ற பீமசேனன் தனது அண்ணன் யுதிஷ்டிரனிடம் நடந்த விபரத்தை கூற யுதிஷ்டிரன் தனது ஞானதிருஷ்டியால் நடந்த சம்பவத்தை அறிந்து தண்ணீர் எடுக்கவிடாமல் தடுத்த வானரம் வேறு யாருமல்ல அவர் சாட்சத் ஸ்ரீ ஆஞ்சநேயர் தான் மேலும் அவர் உனது அண்ணன்தான் (பீமனும் ஆஞ்சநேயரும் வாயு புத்திரர்கள்) என்று கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டு தண்ணீர் பெற்று வா என்று கூற பீமனும் அவ்வாறே கீழே வந்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கி தாங்கள் யாரென்று அறியாமல் அபசாரம் செய்துவிட்டேன் என்றும் தன்னை மன்னித்து அருள்புரியுமாறும் வேண்டினார்.

ஆஞ்சநேயரும் அவரை ஆலிங்கனம் செய்து நீ எனது தம்பி என்று எனக்கு ஏற்கெனவே தெரியும் என்றும் வேடிக்கைக்காக தான் அவ்வாறு செய்ததாகவும் கூறி தண்ணீர் எடுத்து தந்து ஆசிர்வதித்து தன்னை இவ்விடத்தில் பிரத்ஷ்டை செய்து வழிபட்டு வருமாறு கூறி மறைந்தார். அவ்வாறே பீமன் ஸ்ரீ ஆஞ்சநேயரை இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான் என புராணகால செவிவழி செய்திகள் கூறுகின்றன.


கலியுகத்தில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் இராணிமங்கம்மாள் ஆட்சி காலத்தில் அம்மையநாயக்கனுர் ஜமீன்தார் திரு.காமயசாமிநாயக்கர் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் வைகையின் மணற்படுகையில் கூடாரம் அமைத்து ஓய்வெடுப்பது வழக்கம். அது போன்று ஒரு சித்ரா பௌர்ணமி அன்று இரவு ஓய்வெடுத்து கொண்டிருந்த ஜமீன்தார் திரு.காமயசாமிநாயக்கர் அவர்கள் கனவில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரசன்னமாகி தான் வைகை ஆற்றின் நடுவில் உள்ள ஒரு தாழம் புதரில் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதாகவும் தனக்கு அந்த இடத்தில் ஆலயம் எழுப்பி வழிபட்டு வருமாறும் கூறி மறைந்தார்.

கனவு கலைந்து கண்விழித்த ஜமீன்தார் திரு.காமயசாமிநாயக்கர் தான் கனவில் கண்ட இடத்தை தேடி அதை கண்டறிந்தார். (தற்சமயம் கோவில் உள்ள இடம்) அங்கே தான் கனவில் கண்ட தாழம் புதர் இருப்பதை கண்டு வியந்து அந்த புதரை அகற்றி சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அப்போது புதருக்கு அடியில் ஒரு சிறிய பாறை தென்பட்டது அதை தோண்டி பார்க்கும் போது அது பூமியில் ஆலத்திற்கு முடிவில்லாமல் சென்று கொண்டே இருந்தது அந்த பாறையை வெளியே எடுக்க இயலவில்லை எனவே இதுதான் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி என மனதில் உதயமாக அவ்விடத்தில் ஆலயம் எழுப்பி ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டு வரலானர். இன்று அவரது பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் தான் திருக்கோவிலை நிர்வகித்து வருகிறார்கள்.

 

ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியம் என்பதால் இங்கு நவக்கிரக பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர், நாகர், சப்த கன்னிகள், கருப்பணசாமி தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.  
இத்தலத்தில் அனுமன் ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை ஆகியவை முக்கிய திருவிழா ஆகும். அமாவாசை காலங்களிலும் சனி மற்றும் புதன் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்படும்.

Temple: Arulmigu Sree Anjaneyar Thirukkoil, Anaipatti
Timings: 6.30 AM to 1.30 PM & 3.30 PM to 6.00 PM
Festivals: Margazhi Amavasai, Hanuman Jeyanthi & Rama Navami
Mobile: +91 97860 40907
Place: Anaipatti, Near Nilakottai & Vathalagundu, Dindigul District, Tamilnadu, INDIA.
Geo Location: https://www.google.co.in/maps/@10.0890439,77.8501845,18.25z
Bus Service: Nearest Bus Stand - Nilakottai - 10 km.
Train Service: Nearest Railway station - Sholavanthan - 16 km.
Nearest Aiport: Madurai - 62 km.

All Categories

Banner right

Most Popular