புரோட்டா என்றால் அது விருதுநகர் பர்மா கடை புரோட்டாதான்...
விருதுநகர் என்றாலே நமக்கு முதலில் தோன்றுவது பெருந்தலைவர் காமராஜர். அதற்குப் பிறகு எண்ணெய் புரோட்டாவும், சிக்கன் சாப்ஸ்சும். அதை சாப்பிட்டவர்களுக்கே அதன் தனிச்சுவை தெரியும்.
விருதுநகரில் எண்ணெய் புரோட்டாவிற்கும், சிக்கன் சாப்ஸ்சுக்கும் மிகச்சிறந்த உணவகம் பர்மா கடை. கடந்த 40 வருடங்களாக சிறந்த முறையில் பர்மா கடை உணவகத்தை நடத்தி வருகின்றனர். விருதுநகர் வழியாக நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகள் பர்மா கடையின் ருசியை கண்டிப்பாக அறிந்திருப்பார்கள்.
அது என்ன எண்ணெய் புரோட்டா?
மற்ற புரோட்டாக்கள் மிருதுவாக இருக்கும். ஆனால் எண்ணெய் புரோட்டாவோ மொறு மொறு என்று இருக்கும். சாதாரண புரோட்டாவை சூடான கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுப்பார்கள். ஆனால் எண்ணெய் புரோட்டாவை சூடான கல்லில் அதிக எண்ணெய் ஊற்றி அதில் பொரித்து எடுப்பார்கள். ஆதலால் எண்ணெய் புரோட்டா முறுக்கு போல் மொறு மொறு என்று இருக்கும்.
எண்ணெய் புரோட்டாவும், சிக்கன் சாப்ஸ்சும்...
சூடான எண்ணெய் புரோட்டாவை பிய்த்து அதில் சிக்கன் சாப்ஸ் கிரேவி ஊற்றி ஊற வைத்து சாப்பிட்டால் அதுதான் சொர்க்கம். கூடவே விருதுநகர் மக்களின் ஸ்பெஷல் தேங்காய் சட்னியும்...(வேற எந்த ஊர்க்காரர்களும் புரோட்டாவிற்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிடும் பழக்கம் கிடையாது)
மைதா மாவுடன் கடலை எண்ணெய் சேர்த்துப் போதிய அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகப் பிசைய வேண்டும். நன்றாகப் பிசைந்த பின்னர், மாவை உருட்டி எடுத்து அதைக் கடலை எண்ணெய் ஊற்றி ஊறவைக்க வேண்டும். சிறிதுநேரத்தில் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும். அதனை காயவிடாமல் இருப்பதற்கு ஈர துணியால் மூடி வைப்பது நலம்.
புரோட்டாவை செய்யும்போது மாவை வீசி எடுத்து சுருட்டிவைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் புரோட்டாவில் பல்வேறு அடுக்குகள் ஏற்படும். விரலில் பிய்த்து எடுக்கும்போது எளிதாகாவும், சாப்பிடும்போது மெதுவாகவும் இருக்கும். அதன் பின்னர், கல்லின் நடுவில் கடலெண்ணெய்யை ஊற்றி நன்கு காயவைக்க வேண்டும். அதேநேரத்தில் கல்லைச் சுற்றிலும் புரோட்டாக்களை அடுக்கிவைக்க வேண்டும். இதனால், மாவில் உள்ள ஈரத் தன்மை முழுவதுமாக உறிஞ்சப்பட்டுவிடும். அதைத் தொடர்ந்து, எண்ணெய் கொதித்ததும் அதில் புரோட்டாக்களைப் போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுத்தால் சுவையான, மொறு மொறுப்பான விருதுநகர் எண்ணெய் புரோட்டா ரெடி.
பார்மாகடையில் மீன் ரோஸ்ட்டும், கோலா உருண்டையும்...
Restaurant Name: Hotel Burma Kadai
Timings: 6.30 AM to 11.00 PM
Place: Municipal Office Road, Virudhunagar, Tamilnadu, INDIA.
Geo Location: https://www.google.co.in/maps/@9.5807115,77.9530137,21z
Bus Service: Nearest Bus Stand - Virudhunagar - less than a km.
Train Service: Nearest Railway station - Virudhunagar 2kms
Nearest Airport: Madurai 51 kms