Get APP in 

விமல், வரலட்சமி நடிக்கும் 'கன்னிராசி' படத்தின் புதிய தகவல்.

இயக்குநர் முத்துக்குமரன் இயக்கத்தில், நடிகர் விமல் நடித்து வரும் திரைப்படம் 'கன்னிராசி'. இந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை துறையினர் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த படம் வரும் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

All Categories

Banner right

Most Popular