சிம்புவின் ‘மாநாடு’ படம் கைவிடப்பட்டதா?
பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிக்கவுள்ள படம் 'மாநாடு'. இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. இதனையடுத்து இந்த படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தற்போது இந்த படம் குறித்து ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் படம் கைவிடப்பட்டதாக வதந்திகளை பரப்ப வேண்டாம். படப்பிடிப்பை துவங்குவது என்பது சாதாரமானது அல்ல. 'மாநாடு' படம் திட்டமிட்டபடி எடுக்கப்படும். படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என அவர் பதிவிட்டுள்ளார். 'மாநாடு' பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவு செய்த ட்வீட் இணைப்பு.