Get APP in 

யோகி பாபு கதாநாயகனாக களமிறங்கும் 'காவி ஆவி நடுவுல தேவி''

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1973ம் ஆண்டு வெளியான படம் 'காசியாத்திரை'. இந்த படத்தில் கே.ராமசாமி, ஸ்ரீகாந்த், சுருளி ராஜன், மனோரமா, சோ, குமாரி பத்மினி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு வி.சி.குகநாதன் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகவுள்ளது. இதற்கு 'காவி ஆவி நடுவுல தேவி' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்திற்கும் வி.சி.குகநாதனே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் தேவா இசையமைக்கும் இந்த படத்தை இயக்குநர் ராம நாராணயனின் உதவியாளர் புகழ்மணி இயக்கவிருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, சிங்கமுத்து, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் துவங்க இருக்கிறது.

All Categories

Banner right

Most Popular