Get APP in 

அரசியல்வாதியாக களமிறங்கும் நடிகை சன்னி லியோன்

தமிழில் 'வடகறி' படத்தில் நடிகர் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டார் நடிகை சன்னி லியோன். தற்போது இவர் தமிழில்'வீரமாதேவி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் வி.சி.வடிவுடையான் இயக்கி வருகிறார். இந்நிலையில் 'வீரமாதேவி' படத்தை அடுத்து தமிழில் மீண்டும் இயக்குநர் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'டெல்லி' என்று தலைப்பு வைத்துள்ளனர். முழுக்க முழுக்க அரசியலை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில், நடிகை சன்னி லியோன் தமிழக அரசியல்வாதியாக நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

All Categories

Banner right

Most Popular