இன்று வெளிவந்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' ஒரு பார்வை
சினிமா திரையில் அறிமுகமாகும் ரியோ ரொமான்ஸ் மற்றும் எமோஷன் காட்சிகளில் மிகவும் திணறியுள்ளார். நாயகனாக இன்னும் கடின உழைப்பு தேவை. அதேபோல் விக்னேஷ்காந்த் நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை போடுவது போல தான் உள்ளது. படத்தின் பெரும் பகுதியை இவர்கள் இருவரும் பிடித்து கொள்வதால் நாயகி மற்றும் மற்ற நடிகர்களுக்கு சிறியளவில் மட்டுமே காட்சிகளில் உள்ளது. ராதாரவி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோரின் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. படத்தின் கடைசி 20 நிமிட கிளைமாக்ஸில் ஒரு நல்ல விஷயத்தை இயக்குனர் சற்றே அழுத்தமாக கூறியுள்ளார்.