Get APP in 

இயக்குனராக மாறும் நடிகை அனுபமா

'பிரேமம்' படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இதனை தொடர்ந்து தமிழில் தனுசுடன் 'கொடி' படத்தில் நடித்தார். அதன் பின்னர் தமிழ், மலையாளத்தில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இதனிடையே நடிகை அனுபமாவுக்குத் திரைப்பட இயக்கத்திலும் அதிக ஆர்வம் இருக்கிறது. இவர் தற்போது நடிப்பிற்கு சிறிது இடைவேளை விட்டுள்ளார். இந்நிலையில், துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு மலையாளப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். விரைவில் திரைப்பட இயக்குனராக களமிறங்கவுள்ளார்.

All Categories

Banner right

Most Popular