Get APP in 

இன்று வெளிவந்த 'கொலைகாரன்' படம் ஒரு பார்வை

ஒரு கொலையின் போது ஆரம்பிக்கும் படம், எந்த இடத்திலும் தொய்வில்லாமல் தடதடவென இறுதி வரை சஸ்பென்ஸை தக்க வைத்து வெற்றி அடைந்திருக்கிறது. ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான அத்தனையும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. தொடர் தோல்விகளுக்கு பிறகு விஜய் ஆண்டனி இந்த படத்தின் மூலம் மீண்டும் தனது நடிப்பை மீட்டுள்ளார். காவல்துறை அதிகாரியாக வரும் நடிகர் அர்ஜுன் இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளார். பார்வையிலேயே விசாரணை செய்யும் அவரது காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம். நாயகியை சுற்றி வரும் கதையில் நாயகி தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். சைமனின் இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. முதல் பாதி பலருக்கு புரிவதற்கு நேரம் எடுத்துக்கொள்கிறது. இயக்குனர் இதனை சற்று தவிர்த்து இருக்கலாம். மொத்தத்தில் 'கொலைகாரன்' தமிழில் ஒரு அட்டகாசமான திரில்லர் படம்.

All Categories

Banner right

Most Popular