சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை உள்ளது - பிரபல நடிகை பேட்டி
தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. இதனை தொடர்ந்து 'நடுநிசி நாய்கள்', 'அசல்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவை தொடர்ந்து பாலிவுட் சென்ற அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் "சினிமாவில் பெண்களுக்கு ஒருபோதும் பாதுகாப்பான சூழல் இருந்தது இல்லை. நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன. இந்த நிலைமை மாற வேண்டும். ஆனால் அது மெதுவாகத்தான் நடக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.