பெண்களின் கல்வி நிதிக்காக மாரத்தான் ஓடும் பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. தற்போது தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் பெண் கல்விக்காக நிதி திரட்டும் வகையில், பெங்களூருவில் நடக்கும் மாராத்தான் போட்டியில் நடிகை பிரியாமணி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த போட்டி வருகின்ற மே மாதம் 19ம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.