Get APP in 

'தளபதி 63' படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லி இயக்கத்தில், விஜய்யின் 63வது திரைப்படம் உருவாகிவருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது ட்விட்டர் பக்கத்தில் "அப்டேட் குறித்து என்னிடம் கேட்கும் ரசிகர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். நானும் அப்டேட் வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்களில் ஒருவர்தான். 'தளபதி 63' படத்தின் அப்டேட் வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும். உங்களுடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இரவு பகலாக நாங்கள் பணி செய்து கொண்டிருக்கின்றோம்" என பதிவிட்டுள்ளார். வரவேண்டிய நேரத்தில் அப்டேட் சரியாக வரும் என அர்ச்சனா கல்பாதி குறிப்பிட்டுள்ளதால் விஜய் பிறந்தநாளன்று தகவல் வரும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

All Categories

Banner right

Most Popular