Get APP in 

'தளபதி 63' படத்தில் இணைந்த பாலிவுட் பிரபல நடிகர்

விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தை, ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் இதற்கு முன்பு தமிழில் 'ஆரண்ய காண்டம்', 'மாயவன்' படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.