Get APP in 

ஆதி, ஹன்சிகா நடிக்கும் 'பார்ட்னர்' திரைப்படம் பூஜையுடன் துவக்கம்.

இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மனோஜ் தாமோதரன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்க இருக்கும் படம் 'பார்ட்னர்'. இந்த படத்தில் நடிகை ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நாயகன் ஆதிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் 'குப்பத்து ராஜா' பட நாயகி பல்லக் லால்வானி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. மேலும் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.