Get APP in 

இயக்குனர் சரண் இயக்கும் படத்தில் இணைந்தார் நடிகை ராதிகா.

பிக் பாஸ் புகழ் ஆரவ் 'ராஜ பீமா' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சரண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' என படக்குழுவினர் தலைப்பு வைத்துள்ளனர். மார்க்கெட் ராஜாவாக தாதா கதாபாத்திரத்தில் ஆரவ் நடித்திருக்கும் இந்த பாத்தில் நாயகியாக தெலுங்கு நடிகை காவ்யா தபூர் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தற்போது படப்பிடிப்பில் இணைத்துள்ள இவர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.