Get APP in 

'சிவாஜி' பாணியில் 'தர்பாரில்' பாடலுடன் சண்டை காட்சி

ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பாடலுடன் கூடிய சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக ஒரே நேரத்தில் ஸ்டண்ட் இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் படப்பிடிப்புக்கு வருகை தந்திருப்பதாகவும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் புகைப்படத்துடன் கூடிய ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான 'சிவாஜி' படத்தில் இடம்பெற்றுள்ள "அதிரடி தான் மச்சான் மச்சான்" என்ற பாடல் ஸ்டண்ட் காட்சிகளுடன் இடம்பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.