Get APP in 

தனுசுடன் இணையும் இளம் நடிகை

நடிகர் ⭐தனுஷ் தற்போது 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் என 2 படங்களில் நடித்து வருகிறார். இந்த 2 படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துரை செந்தில்குமார் இயக்கி வரும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை சினேகா நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க மெஹ்ரின் பிர்ஜதா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை இந்த படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.