Get APP in 

'கொலைகாரன்' படக்குழு வெளியிட்ட 'கண்டதை படிக்காதே' போஸ்டர்

நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜூன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'கொலைகாரன்'. இந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, அர்ஜூன், சைமன் கிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனர் ஜோதிமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கண்டதை படிக்காதே' படத்தின் போஸ்ட்டரை 'கொலைகாரன்' படக்குழுவினர் வெளியிட்டனர். பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் திரைக்கதை அமைப்பை கொண்ட இந்த படத்தில் ஆதித்யா நாயகனாகவும், 'திருப்பாச்சி' புகழ் பான்பராக் ரவி ஆர்யான் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் 4 கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.

All Categories

Banner right

Most Popular