Get APP in 

நயன்தாராவின் மாமாவாக நடிக்க தயார் - பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வீட்

'பேட்ட' படத்தை அடுத்து ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 'தர்பார்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் பில் ட்யூக், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் ட்விட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் "முருகதாஸ். எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் என்னால் ரஜினிகாந்தின் அமெரிக்க உறவினராகவோ, நயன்தாராவின் மாமாவாகவோ இருக்க முடியும். ஸ்ரீகர் பிரசாத்தும், சந்தோஷ் சிவனும் நான் நடித்த காட்சிகளை நன்றாக எடிட் செய்ய முடியும். ஏன் இசையமைப்பாளர் அனிருத் கூட உலகம் முழுவதும் இருக்கும் நட்சத்திர நடிகர்களை வைத்து ஒரு ஹிட் பாடல் கொடுக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என பதிவிட்டுள்ளார்.
அதன் இணைப்பு : https://twitter.com/RealBillDuke/status/1139152419793674240