Get APP in 

நடிகர் உதயநிதியுடன் இணையும் பிரபல நடிகை

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மாறன் இயக்கத்தில் தற்போது 'கண்ணை நம்பாதே' என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை பூமிகா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே 'சைக்கோ' படத்தின் டப்பிங் பணிகளையும் துவங்க முடிவு செய்துள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.