Get APP in 

நயன்தாரா படத்தை வெளியிட தடை - நீதிமன்றம் உத்தரவு

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய 'கொலையுதிர் காலம்' நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு தனது தாய் பெயரில் வாங்கியுள்ளார் பாலாஜி குமார். இவர் முன்னதாக 'விடியும் முன்' என்ற படத்தை இயக்கியவர். இந்நிலையில், தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும் 'கொலையுதிர் காலம்' என்ற தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே 'கொலையுதிர் காலம்' என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என பாலாஜி குமார் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'கொலையுதிர் காலம்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேலும், 21ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.