Get APP in 

'சாஹோ' படத்தின் புதிய போஸ்டர்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார் நடிகர் பிரபாஸ். தற்போது 'சாஹோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ‘சாஹோ’ படத்தில் நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் கதாநாயகி ஷ்ரத்தா கபூரின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.