Get APP in 

மம்முட்டி நடிக்கும் 'மாமாங்கம்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில், நடிகர் மம்முட்டி வரலாற்று படமான 'மாமாங்கம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக 'பைவ் ஸ்டார்' பட நாயகி கனிகா நடித்து வருகிறார். இந்நிலையில், தமிழ் தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் உருவாகிவரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தினை தயாரிப்பாளர் வெணுகுன்னபிள்ளை தயாரித்துள்ளார்.