Get APP in 

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் கீர்த்தி சுரேஷை தொடர்ந்து வரலட்சுமி

நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அஜய் தேவ்கனுடன் நடிக்க ஒப்பந்தமானதை அடுத்து, பாலிவுட் ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு சில மாதங்களாகவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சமீபத்தில் ஒல்லியாக மாறினார். இந்நிலையில், நடிகை வரலட்சுமியும் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது சில படங்களில் ஆக்சன் நாயகியாக நடிப்பதால் அவராகவே முன்வந்து உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.