Get APP in 

சசிக்குமாருடன் இணைந்தார் சரத்குமார்

விஜய் ஆண்டனி நடித்த 'சலீம்' படத்தை இயக்கிய நிர்மல்குமார், தற்போது சசிகுமார் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.மோகன்ராம் தயாரிக்கிறார். இன்னும் நாயகி தேர்வு ஆகாத நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடந்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நேற்று துவங்கியுள்ளது. இந்நிலையில், 25 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் சசிக்குமருடன் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளார். இந்த படத்தில் சரத்குமார் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.