Get APP in 

'தளபதி 64' படத்தின் படக்குழு குறித்த தகவல்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் 'தளபதி 64' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோ என்பவர் தயாரிக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் சத்யன்சூரியன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.