Get APP in 

சூர்யா படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்

ஹாலிவுட் திரைப்படமான 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தின் அனைத்து பாகங்களும் மெகா ஹிட் பெற்றது. இதற்கு இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மிக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த கிரேக் பவல் என்பவர் நடிகர் சூர்யா நடித்து வரும் 'சூரரை போற்று' படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக இணைந்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் பயங்கரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.