Get APP in 

'தலைவி' படம் குறித்த புதிய தகவல்

தமிழ் சினிமாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' மற்றும் 'தி அயர்ன் லேடி' என்ற தலைப்புகளில் உருவாகி வருகிறது. 'தி அயர்ன் லேடி' படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். 'தலைவி' படத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்க உள்ளார். இந்நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் 'தலைவி' படத்திற்காக கங்கனாக ரணவத் தமிழ் கற்று வருகிறார். மேலும், இந்த படத்திற்கு சுமார் 100 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனமான விபிரி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் துவங்கவுள்ளது.