Get APP in 

'தளபதி 63' பாடல்கள் குறித்த புதிய தகவல்

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் பாடல்களுக்கு பின்னணி இசை அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்களை திரையில் முதல் முதலில் பார்த்தது நான் தான் என பெருமையுடன் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார். மேலும் அவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் இயக்குனர் அட்லியும் உள்ளார்.