Get APP in 

தனுஷின் 35வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்போது 2 படங்களை தயாரித்து வருகிறது. அவற்றில் இயக்குனர் துரைசந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் இந்த படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை. இந்நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் 'தனுஷ் 35' திரைப்படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ராம்குமார் ஏற்கனவே 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' ஆகிய 2 வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.