Get APP in 

சண்டை காட்சிகளில் என்னை மிஞ்சிவிட்டாய் - பிரபல நடிகர் ட்வீட்

தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருபவர் வரலட்சுமி. தற்போது இவரது நடிப்பில் 'சேஸிங்' என்ற ஆக்சன் திரில்லர் படம் உருவாகி வருகிறது. கே.வீரக்குமார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகரும், வரலட்சுமியின் தந்தையுமான சரத்குமார், வரலட்சுமியின் சண்டை காட்சிகளை பாராட்டியதுடன், படக்குழுவினருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.