Get APP in 

மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார் த்ரிஷா ?

விஜய் நடித்த 'திருப்பாச்சி', 'வில்லு' படங்களில் நடித்த நயன்தாரா, தற்போது மீண்டும் விஜய்யுடன் அவரது 63வது படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய்யுடன் 'சிவகாசி', 'ஆதி', 'கில்லி' படங்களில் நடித்த த்ரிஷாவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64வது படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் 64வது படத்தில் த்ரிஷா முக்கிய நாயகியாகவும், படத்தின் மற்றொரு நாயகியாக ராஷ்மிகா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.