Get APP in 

போலீஸ் அதிகாரியாக களமிறங்குகிறார் அஜித்

நடிகர் அஜித், தற்போது போனிகபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கோட்டு சூட்டு அணிந்து நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார் அஜித். இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க இயக்குனர் கேட்டுக் கொண்டதை அடுத்து ஜிம்மிற்கு தீவிரமாக சென்று உடல் எடையை நிறையவே குறைத்திருக்கிறார்.