Get APP in 

பாபி சிம்ஹாவின் 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தின் சென்சார் குறித்த தகவல்

பாபி சிம்ஹா 'ஜிகர்தண்டா' படம் மூலம் அசால்ட் சேதுவாக, தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். தனக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்த அசால்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி 'வல்லவனுக்கு வல்லவன்' என்ற படத்தை கடந்த 2015ம் ஆண்டு தயாரிக்க துவங்கினர். ஆனால் சில காரணங்களால் இந்த படத்தின் திரையிடும் பணி தள்ளி போனது. இந்நிலையில், இந்த படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு "யூ" சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக 'நெடுஞ்சாலை' சுவேதா நடித்துள்ளார்.