Get APP in 

டாப்சியின் 'கேம் ஓவர்' படத்தின் சென்சார் குறித்த தகவல்

இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில், நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கேம் ஓவர்'. இந்த படத்தில் வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடிகை டாப்ஸி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தை தணிக்கை செய்த தணிக்கை துறையினர் படத்திற்கு "யூ/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்த படம் வருகின்ற ஜூன் 14ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.