Get APP in 

சூர்யாவின் ரசிகைகளுக்கு சிறப்பு காட்சி

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் 'என்.ஜி.கே'. எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தாமதமாகி தற்போது தயாராகியுள்ளது. மேலும் இந்த படம் மே 31ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் உள்ள மலப்புறம் மாவட்டம் சங்கரங்குளத்தில் உள்ள மார்ஸ் சினிமாஸ் திரையரங்கில் சூர்யாவின் பெண் ரசிகைகளுக்காக சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த செய்தி ரசிகைகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.